சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் கனமழை பெய்தது.வெள்ளக்காடான சாலைகள்.கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.பல பகுதிகளில் சாலைகளில் இருபுறமும் மழைநீர் கரைபுரண்டோடியது.கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.அலுவலகம் செல்பவர்கள் தங்கள் வாகனங்களை தண்ணீரில் மிதந்தபடியே ஓட்டி சென்றனர்.தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கி நின்றது.சில இடங்களிவ் வெளிச்சம் குறைவாக இருந்ததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்கள் இயங்கின.சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்த மழைநீர்.மழைநீர் வடியாமல் பல பகுதிகளை வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்தது.சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முட்டியளவுக்கு தண்ணீர் தேங்கியது.புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.