பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது - புகைப்படங்கள்
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
Advertisement
Advertisement
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தில் தீ பிடித்து எரியும் காட்சி.மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு பாதுகாப்புத்தூறை உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.விபத்துக்குள்ளான மிராஜ் 2000 ரக விமானம் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகள் ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.