பெங்களூரு பி.இ.எஸ் பல்கலைக்கழகம் அருகே உள்ள பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 பேருந்துகள் எரிந்து சேதமடைந்ததைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.தீ விபத்து ஏற்பட்டு சுமார் 15 பேருந்துகள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.கர்நாடக மாநிலம், பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து பணிமனையில் எரிந்து சேதமடைந்த பேருந்து.தீ விபத்தை தொடர்ந்து பேருந்து பணிமனையில் திரண்ட மக்கள் கூட்டம்.