செய்திகள்

விடை பெற்றார் வாஜ்பாய்

தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  அவருடைய இறுதி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT