காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் பதிவிட்டதாக கூறப்படும் முகநூல் பதிவால் நேற்றிரவு பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கபடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.போராட்டக்காரர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டதோடு, வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியும் கலைத்துள்ளனர்.கலவரத்திற்கு காரணமாக சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.முதலில் தடியடி, பிறகு கண்ணீர்ப்புகை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.