முகப்பு
செய்திகள்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பகிர்:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி.
செங்கோட்டையில் கொடியேற்ற வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி ராணுவத்தின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தேசியக் கொடியை ஏற்றியவுடன் விமான படைக்குச் சொந்தமான இரு மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற 32 வீரர்களை மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →