திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு நிலவின் நிலப்பரப்பில் தரை இறங்கியது விக்ரம் லேண்டர். 
செய்திகள்

நிலவில் கால் பதித்த சந்திரயான் 3 - புகைப்படங்கள்

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

DIN
விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி.
நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை தென்ஆப்ரிக்காவிலிருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி பார்வையிட்டார்.
நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை உலகமே ஆவலோடு கண்டுகழித்து. சரியாக மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்தியா நிலவில் காலடி பதித்துள்ளது ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
லேண்டரும், அதனுள் ரோவா் சாதனமும் நிலவில் தடம் பதித்தன் மூலம், நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை சாதித்து காட்டிய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
நிலவை நெருங்கும் லேண்டரின் கடைசி ஏழு நிமிடங்கள் மிகவும் முக்கியம் என்பதால், விஞ்ஞானிகள் லேண்டர் கருவியை நொடிக்கு நொடி கண்காணித்து வந்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டியும், ஆரவாரம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
உச்சகட்ட மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து ஆர்ப்பரிக்கும் பொதுமக்கள் கூட்டம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடிய பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT