இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது.அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் கவனத்தையும் ஈா்த்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன.லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்யும்.விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக் கொள்ளும்.