ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இடிபடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம் ராயகடா விரைவு ரயில் மோதியதில் ராயகடா ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதில் தண்டவாளங்களும் உருக்குலைந்தது.நின்று கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயிலின் பின்பகுதியில் ராயகட்ட எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.விபத்தில் சிக்கியவர்களையும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள்.இரவு நேரத்தில் விபத்து நடைபெற்ற காரணத்தால் மீட்பு பணியில் பெருமளவில் தாமதம் ஏற்பட்டது.விபத்து குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.