பாசறைக்கு திரும்பும் நிகழ்வு தில்லி விஜய் சவுக்கில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் அதற்குப் பிறகு பாசறைக்குத் திரும்புவார்கள். இந்தாண்டு தில்லியில் முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு கோலாகலாக நடைபெற்றது.பல்வேறு நிகழ்வுகள் கோலாகலாக நடந்தன.குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த மூன்றாவது நாள் முப்படை வீரர்கள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு தில்லி விஜய் சவுக்கில் நடைபெற்றது.முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் வாத்திய கருவிகளை இசைக்க, குடியரசுத் தலைவர் முர்மு விழா நடக்கும் இடத்துக்கு வருவார்.பேண்டு வாத்தியங்கள் இசைக்க கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர்.ராணுவப் படை, கடற்படை, விமானப்படை, மாநில போலீஸ், மத்திய ஆயுதப்படை வீரர்கள், இசைக்குழுவினர் அணிவகுப்பு நடைபெற்றது.தேசப்பற்று பாடல்கள் இசைத்தப்படி அணிவகுப்பு நடைபெற்றது.குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.