செனாப் பாலத்தின் மீது முதல் முறையாக சோதனை ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. -
முதற்கட்ட சோதனை ஓட்டமாக சங்கல்டான் முதல் ரெய்சி வரை ரயில் சோதனை ஓட்டம்.ஜம்மு-காஷ்மீரில், செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் மீது ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை இதுவே ஆகும்.காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டது.உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலம்.பாரிஸில் உள்ள ஈபில் டவரை விட சுமார் 35 மீட்டர் அதிகமாகும் இந்த பாலம்.செனாப் நதி பகுதியை கடக்கும் ரயில்.செனாப் நதி பகுதியை கடக்கும் வகையில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.