பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்களைக் கொண்ட உலகின் மிகவும் வறண்ட பாலைவனமாக அறியப்பட்ட சஹாரா பாலைவனத்தில் திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் என்பது அரிதினும் அரிது.50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது.ஓரிரு நாட்களில் பெய்த மழையால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கிறது.நாசாவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.