வடகிழக்கு தில்லி முஸ்தபாஃபாத்தில் பழமையான 4 மாடி கட்டடம் இன்று அதிகாலை நேரத்தில் இடிந்து தரை மட்டமானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். ANI
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இடிபாடுகளை அடுத்து, அக்கம் பக்கத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றததாகவும் கட்டடம் இடிந்து விழுந்த தருணத்தை அருகிலுள்ள சந்து ஒன்றில் உள்ள சிசிடிவி படம் பிடித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.தில்லி தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி தீயணைப்பு சேவை மற்றும் பிற நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.தரைமட்டமான வீடு.