11 ஆவது சர்வதேச யோகா நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. 
செய்திகள்

11வது சர்வதேச யோகா நாள் - புகைப்படங்கள்

DIN
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி.
புதுதில்லியில் உள்ள லோதி கார்டனில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்து அசத்திய பெண்.
அகமதாபாத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் நடைபெற்ற சர்வதேச யோகா நாளை முன்னிட்டு யோகா பயிற்சி செய்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா பயிற்சியில் பங்கேற்று யோகா பயிற்சி செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி யோகா பயிற்சி மேற்கொண்டார்.
மாணவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்ட நடிகரும் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் நிறுவனருமான மோகன்லால்.
புது தில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார்.
குருகிராமில் யோகா பயிற்சி மேற்கொண்ட பாலிவுட் நடிகை சோனல் சௌகான்.
பெங்களூருவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.
குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் போது யோகா பயிற்சி மேற்கொண்ட ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர்.
யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா அமர்வில் பங்கேற்று யோகா செய்து மகிழ்ந்த மக்கள்.
பிரயாக்ராஜில் யோகா தினத்தை முன்னிட்டு சங்கத்தில் யோகா பயிற்சி செய்யும் மக்கள்.
11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்.
மகாராஷ்டிரத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள்.
மும்பையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா பயிற்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ்.
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள கதர்மல் சூரிய கோயில் வளாகத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பலர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லே-வில் யோகா பயிற்சி செய்த பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் பலி; மற்றொருவா் மாயம்!

காணாமல் போன மாற்றுத்திறனாளி கா்ப்பிணியை குடும்பத்துடன் இணைத்துவைத்த தில்லி போலீஸாா்

கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கான தோ்வு: 676 போ் எழுதினா்

அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது: ரூ.8 லட்சம் மீட்பு

SCROLL FOR NEXT