திரைத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, தேசிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளிவந்த 'பார்க்கிங்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகர் என மூன்று பிரிவுகளில் விருதை தன் வசப்படுத்தியது.
புது தில்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,
உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்று கொண்ட நடிகை ஊர்வசி.பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான் படத்துக்காக 'சிறந்த நடிகர்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.நடிகர் மோகன்லாலுக்கு 2023க்கான தாதாசாகேப் பால்கே விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜு.பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கு 'சிறந்த நடிகர்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.12th ஃபெயில் படத்துக்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.நடிகை ஜான்கிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான பிரிவில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்துக்காக விருதை பெற்று கொண்ட கரண் ஜோஹர்.சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினை திரீஷாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. மராத்தி குழந்தை நடிகர் கபீர் கந்தரேவுக்கு 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.சிறந்த குழந்தை கலைஞர்கள் பிரிவில் பார்கவ் ஜக்தாப்புக்கு விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.