இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகளாக மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றிய நிலையில், இன்றுடன் (செப்டம்பர் 26, 2025) மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெறும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது. Salman Ali
இன்றுடன் விடைபெறும் மிக்-21 போர் விமானத்தில் கடைசியாக பயணித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்.இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமான சேவை இன்றுடன் விடைபெற்றன.விமானம் தரையிறங்கியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது.சுமார் 60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள்.நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு.சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன.விடைபெறும் மிக்-21 போர் விமானம்.விமான படைத் தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேஜஸ் போர் விமானங்கள் உடன் மிக் 21 போர் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது.விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங்.விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான், விமான படை தளபதி ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.