முகப்பு
அரசியல்

விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்புப் புகார், ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார் எதிரொலியாக இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →