ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து 71 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.