தமிழக சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் வாக்களித்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பகிர்:
எடப்பாடி தொகுதியில் வாக்களித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.சென்னை நீலாங்கரையில் வாக்களித்த தவெக தலைவர் விஜய்.வாக்களித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Advertisement
தியாகராய நகரில் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா.அடையாறில் வாக்களித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.தேனாம்பேட்டையில் வாக்களித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.சாலிகிராமத்தில் வாக்களித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.தியாகராய நகரில் வாக்களித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பாளையங்கோட்டையில் வாக்களித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது 99 வயதிலும் நேரில் வந்து வாக்களித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே.ஆவடியில் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம்.
வியாசர்பாடியில் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன்.அடையாறில் வாக்களித்த அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
ஆதம்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.தியாகராய நகரில் மனைவியுடன் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன்.