காந்தி 150

சட்ட மறுப்பு தாமதப்படுவதேன்?

தினமணி

"நம்முடைய சிறந்த ஊழியர்கள் ஒவ்வொருவராகப் பிடித்து சிறையில் அடைக்கப்பட்டு, நாம் போராட்டம் நடத்தி தாக்காமலே போரை இழந்தாகி விட்டது என்ற நிலைமை வரையில் சட்ட மறுப்பை தாமதப்படுத்துவது சரியா?'' என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, மகாத்மாஜி பதிலளித்திருக்கிறார். சட்ட மறுப்பு தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் தயாரிப்புகள் போதாதென்பதே என்று காந்திஜி கூறுகிறார்.
 சட்ட மறுப்பு ஆரம்பிப்பது முற்றிலும் நியாயமே என்பதற்கு போதிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சட்ட மறுப்பை நாம் ஆரம்பிக்காமலிருப்பதற்கு காரணம் அதற்கு போதிய நியாயம் இல்லையென்பதல்ல. தயாரிப்புகள் போதாதென்பதாலேயே தாமதிக்கப்படுகிறது.
 என்னுடைய பின்புலமும், வசதிகளும் சொற்பமாக இருப்பதாக அறிந்தும் நான் சண்டையை ஆரம்பிப்பேனாகில் நான் மோசமான தளகர்த்தனேயாவேன்.
 நியாயமான காரணமில்லாமல் நமது தலைவர்களை சிறைப்படுத்திக் கொண்டு போவார்களாயின் அது காங்கிரஸை வலிய சண்டைக்கு இழுப்பதாகவே அர்த்தமாகும். நான் அந்த அறைகூவலை ஏற்பதற்கு தயார் செய்ய முடியவில்லையாயின் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
 தலைவர்கள் இவ்வாறு சிறைப்படுத்தப்படுவது தேசத்துக்கு ஒரு பாதகமும் விளைவித்து விடாது. ஏனென்றால் கட்டுப்பாட்டுக்குட்பட்டு சிறை புகுவது போராட்டத்தின் அம்சமே ஆகும். தவிரவும் தலைவர்கள் கைது செய்யப்படுவது நம்முடைய ஸ்தாபன பலத்துக்கும் நல்ல பரீûக்ஷயாகும். அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபன அமைப்பு என்றால் எல்லாரும் சமமான லாயக்கும் சக்தியுமுள்ளவர்களாக இருப்பதாகவே அமையும். அந்த நிலைமைக்கு நாம் இன்னும் வரவில்லையாயின், அதற்கு காரணம் அஹிம்சையின் செயல்முறையைப் பற்றி நாம் பூர்ணமாக அறியாததே காரணம்.''
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT