சென்னை, ஜன. 14 - ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு மேலும் 18,500 பேர் வந்துள்ளனர். இதுவரை அங்கிருந்து இடம் பெயர்ந்தோர் 1,57,000 பேர். வெளியுறவு காரியதரிசி திரு. கேவல் சிங் இங்கு இன்று நிருபர்களிடம் இதை தெரிவித்தார்.
தாயகம் திரும்பிவருவது சுமுகமான முறையில் நடைபெறுவதாகவும் பிரச்னை ஏதுமில்லை என்றும் கூறினார்.
சென்னை, ஜன. 14 - சமாதானத்திற்கான அணு சோதனைகளை நடத்துவதைக் கைவிடுமாறு செய்ய சில நாடுகள் இந்தியாவை நிர்பந்தித்து வருவதாகவும், ஆனால் எந்த நாட்டு நிர்பந்தத்திற்கும் இந்தியா அடிபணியாதென்றும் சென்னை ‘பக்வாஷ்’ மகாநாட்டில் பேசிய பிரதமர் இந்தியா காந்தி கூறினார்.
‘இந்தியா போன்றதொரு பெரிய நாடு கீழான நிலையிலேயே இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது சரியாகாது. வளைந்து கொடுக்கும் தலைமயை ஏற்படுத்த முயல்வது தவறானதாகும்’ என்றார்.
சென்னையில், விஞ்ஞானம் உலக விவகாரங்கள் பற்றிய 25-வது “பக்வாஷ்” மகாநாட்டில் பிரதமர் பேசினார். “பயமுறுத்தல்கள் நாட்டிற்குள்ளிருந்து வந்தாலும் சரி, வெளியே இருந்து வந்தாலும் சரி, (சாதாரணமாக இவை இரண்டிற்குமிடையே தொடர்பு இருக்கும்) போதுமான முன்னெச்சரிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொள்வது உறுதி. ஒரு தலைமுறைக்கு முன்புதான் விடுதலை பெற்றுள்ள நாடுகள் தங்கள் பூர்ண சுதந்திரத்தைக் காக்க விழிப்புடனிருப்பது இயற்கையே. தொடர்ந்த முன்னேற்றத்திற்கும் சுதந்திரம் அவசியமே” என்றார். சமீப இந்திய சம்பவங்களுக்கான சூழ்நிலையை தெரிவிக்கவே தான் இதையெல்லாம் கூறுவதாகக் கூறினார். ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.