முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

14.3.1976: சர்க்காரியா கமிஷனுக்கு தேவைப்படும் தஸ்தாவேஜுகள் - பத்திரமாக பாதுகாக்க ஏற்பாடு

சர்க்காரியா கமிஷனுக்கு தேவைப்படும் தஸ்தாவேஜுகள் பற்றி...

Updated On : 14 மார்ச், 2026 at 4:00 AM
14.3.1976
பகிர்:

சென்னை, மார்ச்: 18 - முன்னாள் முதலமைச்சர், இதர அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள சர்க்காரியா (சுப்ரீம் கோர்ட் நீதிபதி) கமிக்ஷன் விசாரணைக்குத் தேவையான தஸ்தாவேஜிகள், கோப்புகள் (பைல்கள்) ஆகியவற்றைத் தருவித்து ஒழுங்குபடுத்தல், பத்திரப்படுத்தல் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மருத்துவ கல்லூரி தேர்வு, வீராணம் திட்டம் ஆகியவை சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜிகள் சேகரித்து பாதுகாக்கப்படுகின்றன. 1971ம் ஆண்டு முதல் 1978 முடிய தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரிக்கு நடத்தப்பட்ட தேர்வு, தேர்வுக் குழு நீதிபதிகள் தேர்வு நடத்த பின்பற்றப்பட்ட முறைகள், தேர்வு செய்வப்படாமல் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் ஆகிய விவரங்களடங்கிய தஸ்தாவேஜிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரிவில் ஒரு அறையில் வைத்து சீல் வைத்துப் பூட்டி ஆயுத போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இரு தினங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி தேர்வு அலுவலகத்திலிருந்தும், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்தும் தஸ்தாவேஜிகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டன.

இதே போல, வீராணம் திட்டம், சம்பந்தமான கோப்புகளையும் நஸ்தாவேஜிகளையும் சேகரித்து பத்திரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதிகாரியை திருப்பிக் கொணர ஏற்பாடு

இதற்கிடையில் நீண்ட நாள் விடுமுறையில் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுவிட்ட அரசு அதிகாரி ஒருவரை திரும்ப கொண்டு வருவதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதவி விலக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர் ஒருவரின், கெஜட் பெற்ற உதவியாளராக இருந்த இந்த அதிகாரி, ஆறு மாத லிவ் போட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு இந்த அதிகாரி சம்பந்தப்பட்ட விவகாரம் தேவைப்படுவதால், அவரை வெளி நாட்டிலிருந்து திருப்பிக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லெபனான் நாட்டில் ராஜிநாமா செய்ய மறுக்கும் அதிபரை வெளியேற்ற சபாநாயகர் ஆயத்தம்

பேரூட், மார்ச். 13 - லெபனானின் அதிபர் பதவியிலிருந்து வெளியேற மறுத்துவரும் சுலைமான் பிரான்ஜேயை அப்பதவியிலிருந்து அகற்றி நாட்டை சுமார் ஓராண்டு காலமாக சீரழித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு லெபனானில் ஆட்சிக்கு எதிரான புரட்சியின் தலைவர்கள் இன்று பார்லிமெண்டைக் கேட்டுக் கொண்டனர்.

அதே நேரத்தில் பார்லிமெண்டின் முஸ்லிம் சபாநாயகரான கமால் அஸாத், மேலும் துப்பாக்கி முழக்கமின்றி அதிபரை எப்படி வெளியேறச் செய்வது என்பது பற்றி சட்டப்பூர்வமான, கௌரவமான ஒரு வழியை கண்டறிவதற்காக பார்லிமெண்ட் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். 65 வயதான அதிபர் கிறிஸ்தவ மரோனைட் பிரிவைச் சேர்ந்தவர்.

57 வயதான புரட்சித் தலைவர் அஹ்தாபின் பின்னால் நிற்கும் துருப்புகள், இடதுசாரி முஸ்லிம் ஆயுதபாணிகள், பாலஸ்தீன கொரில்லாக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து அஹ்தாபின் புரட்சியை சிரியாவும் லெபனானின் இடதுசாரியினரும் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. '

பேரூட்டில் நடந்த சண்டையிலும், முஸ்லிம் ஆயுதபாணிகளுக்கும், அதிபர் பிரான்ஜையின் ஊரைச் சேர்ந்த கோஷ்டியினருக்கும் இடையே நடந்த மோதல்களிலும் இருபதுக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். ...

summary

14.3.1976: Documents required by the Sarkaria Commission - Arrangements for safekeeping

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.