29.3.1976: பட்ஜெட்டுக்குப் பிறகு மின் விசிறி, டெலிவிஷன் விலைகள் குறைந்தன - காகிதம், சோடா கலர் விலை அதிகரிப்பு
பட்ஜெட்டுக்குப் பிறகு மின் விசிறி, டெலிவிஷன் விலைகள் குறைந்தது பற்றி...
புதுமல்லி, மார்ச். 28- மத்திய அரசாங்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளின் பலனாக பல நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளன. ஆனால், காகிதம், சோடா, கலர் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
கார்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இதன் பலனாக சென்னையில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. மின்விசிறி, டெலிவிஷன் பெட்டிகள் ஆகியவற்றின் விலைகள் ஓரளவு குறைந்துள்ளன.
பட்ஜெட்டுக்குப் பிறகு உள்ள விலை நிலவரம் குறித்து சமாசார் செய்தி ஸ்தாபன அமைப்பு நடத்திய சர்வேயிலிருந்து பாட்டரி செல்கள், ரசாயன சலவைப் பவுடர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேடுகள், சோப்புகள் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சோப்புகளின் விலை 3 முதல் 5 பைசா வரை குறைந்திருக்க, டெலிவிவுன் பெட்டிகளின் விலைகள் ரூ.300 குறைந்துள்ளது.
கொச்சியில் சில ரக பாட்டரி செல்கள் பட்ஜெட்டுக்கு முன்னர் செல் ஒன்று ரூ. 2-10 வீதம் விற்கப்பட்டன. இப்போது அதன் விலை ரூ.1-90 ஆகக் குறைந்துள்ளது. ...
பாதிக்கு மேலான நிலம் விளையாத விவசாயிக்கு சலுகை - கடன், நிலவரி, செஸ் வசூல் ஒத்திவைப்பு
சென்னை, மார்ச். 28- ஒரு கிராமத்தில் ஒரு விவசாயிக்கு உள்ள நிலத்தில பாதி அல்லது பாதிக்கு மேல் விளையாது இருந்து கிஸ்தி வஜா அளிக்கப்பட்டிருந்தால் (அல்லது அளிக்கப்படுவதாக இருந்தால்) அவருக்கு அரசு இப்போது புதுச் சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது.
அவருடைய நில வரி, லோகல் செஸ், கடன் தவணைகள் நிலுவைகள் வசூல் 1386-ஆம் பஸலிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1385-ம் பசலிக்குச் செலுத்த வேண்டிய நில வரி ஒத்திவைக்கப்பட்டது சம்பந்தமாகச் சில விளக்கங்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.
1385-ஆம் பசலியில் செலுத்த வேண்டிய நில வரியும் லோகல் செஸ்ஸும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விஷயத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. கடன்களில் 1385-ஆம் பசலி செலுத்த வேண்டிய தவணைத் தொகையையும், முன்பாக்கிகளையும் செலுத்துவது கடினமாக இருக்கும் என்று கருதி, அவைகளின் வசூலை 1386-ஆம் பஸலிக்குத் தள்ளி வைத்தும் அரசாங்கம் மார்ச் மாதம் 4 ஆம் தேதி உத்தரவிட்டது. ...