மருத்துவம்

சர்க்கரை நோய்: குண்டான ஆசாமிகளே... கிண்டலுக்கு பயப்படாதீர்கள்

இது கம்ப்யூட்டர் யுகம். எல்லோருக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. விளைவு, பெரும்பாலானோருக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. கொஞ்ச நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலே, "உஸ்', "உஸ்'....அப்பாடா...எ

தினமணி

இது கம்ப்யூட்டர் யுகம். எல்லோருக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. விளைவு, பெரும்பாலானோருக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. கொஞ்ச நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலே, "உஸ்', "உஸ்'....அப்பாடா...எனக் குரல்கள் கேட்கத் தொடங்கி விடுகின்றன.

எல்லாம் சதான். ஆனால், விரும்பியபடி வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இஷ்டப்படி வாழ்ந்தால், நோயின் தன்மைக்கு ஏற்ப டாக்டன் கிளினிக்கிலோ அல்லது மருத்துவமனையிலோ அவ்வப்போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தினம் உடற்பயிற்சி இல்லாமை, உணவுக் கட்டுப்பாடு இல்லாத வசதியான வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து வருகிறது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல், அதிக எடை பிரச்னை உள்ளதா?

உடனடியாக எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுங்கள். ஏனெனில் அதிக எடை, உடல் பருமன் பிரச்னையாக மாறினால், சர்க்கரை நோய்க்கு சிவப்புக் கம்பளம் விக்கும். "சர்க்கரை' வந்து விட்டதா? மருத்துவ அறிவியல் முன்னேற்றம் காரணமாக, "ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' (ஓ.ஜி.டி.டி.) ரத்தப் பசோதனை மூலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பின் செயல்பாட்டை எளிதாகத் தீர்மானித்துவிட முடியும்.

(ஓ.ஜி.டி.டி. பசோதனை குறித்த விவரங்கள், ஓ.ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவு அட்டவணை உள்ளிட்டவை டாக்டர் வி.பாலாஜி, டாக்டர் மாது எஸ். பாலாஜி ஆகியோன் சர்க்கரை நோய் குறித்த கட்டுரையில் இம் மலல் இடம் பெற்றுள்ளன.)

இன்சுலின் சீராகச் சுரக்கும் நிலையில்தான், ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாறும். இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகக்க ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகத் தெந்த உடனேயே காபி-டீக்கு சர்க்கரை போட்டுக் கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.

அடுத்தபடியாக ஒவ்வொரு வேளையும் சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடாக பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக மதிய உணவு சாப்பிடும்போது, தொட்டுக் கொள்ளும் உணவுப் பண்டங்களாகிய கூட்டு, காய் ஆகியவற்றை முன்பைவிட அதிக அளவு சாப்பிடலாம். உருளைக் கிழங்கு சிப்ஸ், ஃபிரைடு ரைஸ் உள்பட எண்ணெய்யில் பொத்த பண்டங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மாலையில் டீ, போண்டா, பஜ்ஜி, வடை என இஷ்டம்போல் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை இல்லாத டீ-காபி மற்றும் சுண்டல் அல்லது முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வடை அல்லது போண்டா சாப்பிடலாம்.

வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிடும்போது, தூய்மையான காகிதத்தைக் கொண்டு அதில் உள்ள எண்ணெய்யை உறிஞ்சுவிட வேண்டும்.

அசைவம் சாப்பிடுவோராக இருந்தால், குழம்பில் போட்ட கோழிக்கறி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்; மசாலா நிறைந்த குழம்பை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. வாரத்துக்கு ஒரு நாள் மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.

காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாத காபி அல்லது டீ, வழக்கமான காலைச் சிற்றுண்டியின் அளவைச் சிறிது குறைத்துக் கொண்டு சாம்பாரை சிறிது அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் மோர் அல்லது இளநீர் குடித்தல், மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,

மாலையில் டீ-உடன் சுண்டல் அல்லது முளை கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுதல், இரவுச் சாப்பாட்டிலும் காய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், படுக்கச் செல்லும் முன்பு சர்க்கரை சேர்க்காத பால் குடித்தல் என தினச உணவுப் பட்டியலை அமைத்துக் கொள்ளலாம். மேற்சொன்ன உணவு முறை மாற்றத்துடன், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெய வந்தவுடனாவது தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உடற்பயிற்சி செய்து பழக்கமே இல்லாதவர்கள், முதலில் காலையில் 10 நிமிஷம் "வாக்கிங்' செல்லத் தொடங்க வேண்டும்; தொடர்ந்து ஒரு வாரம் சென்றவுடன், படிப்படியாக 15 நிமிஷம், 20 நிமிஷம் என "வாக்கிங்' நேரத்தை அதிகத்து அதிகபட்சம் தினமும் அரை மணி நேரம் "வாக்கிங்' செல்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால்...:

ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவுப் பசோதனையில், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெந்தால், மேற்சொன்ன உணவு முறை மாற்றம் - உடற்பயிற்சியை ஒரு நபர் சுயமாக தாமே மேற்கொள்வதில் தவறில்லை.

ஆனால், ரத்த சர்க்கரை அளவுப் பசோதனையில் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிவிட்டால், உணவு ஆலோசனை நிபுணடம் செல்வது அவசியம். அப்போதுதான் சர்க்கரை நோயினால் ஏற்படும் பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

கலோ மதிப்பீடு:

உணவு மருத்துவ ஆலோசனை மையத்துக்கு சர்க்கரை நோயாளி வந்தவுடன், தினமும் அவர் சாப்பிடும் உணவின் கிலோ கலோ அளவு மதிப்பிடப்படும். ஆரோக்கியமாக உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1,600 கிலோ கலோச் சத்தை கொடுக்கக்கூடிய உணவு தேவைப்படும்.

இதேபோன்று 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1,800 கிலோ கலோச் சத்தை கொடுக்கக்கூடிய உணவு தேவைப்படும். நோயாளியின் உயரம், எடை, உடல் பருமன் அட்டவணை மதிப்பீடு ஆகியவற்றுக்கு ஏற்ப அவரது உணவுத் தேவை கணக்கிடப்படும்.

அதற்கு ஏற்ப உணவு முறை மாற்றத்தை உணவு ஆலோசனை நிபுணர்கள் வழங்குவார்கள். பசி ஏற்படும் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகக்காமல், அதே சமயம் பசியைப் போக்கும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் உள்பட உணவுப் பண்டங்கள் குறித்துச் சொல்லித் தரப்படும்.

ஒரு கட்டு கட்டாதீர்கள்:

இப்போதெல்லாம் விழாக்கள் இல்லாத நாளே இல்லை. எனவே விருந்து சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. சர்க்கரை நோயாளிகள், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அளவுக்கு அதிகமாக இனிப்பைச் சாப்பிடக் கூடாது. உதாரணமாக, விருந்தில் ஒரு கப் பாயசம் வைக்கப்பட்டிருந்தால்,

அதை முழுவதும் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மிகக் கொஞ்சமாக ருசித்துவிட்டு, இலையில் பமாறப்பட்ட மற்ற இனிப்புகளைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. மேலும் விருந்தில் பமாறப்பட்ட அனைத்துப் பண்டங்களையும் ஒன்று விடாமல் சாப்பிடுவதும் நல்லது அல்ல.

சர்க்கரை நோய் ஏற்பட்ட பிறகு உணவு முறை மாற்றத்துடன் "வாக்கிங்' செல்வதை வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தினமும் "வாக்கிங்' செல்வதன் மூலம் இன்சுலின் உற்பத்தி சீராகும்.

ரத்த சர்க்கரை அளவு அதிகக்காது. இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்வோராக இருந்தால், அதன் அளவு குறையும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால், இதயத்துக்கும் "வாக்கிங்' நல்லது.

சமச்சீரான உணவு முறை

"சர்க்கரை': வாயிலோடு அனுப்பி விடுங்கள்

உறவினர் விருந்தாளியாக வந்தால், வீட்டில் சில நாள்கள் தங்கும்படி மன்றாடுகிறோம். நண்பராக இருந்தால் இன்முகத்துடன் வரவேற்று வீட்டு வரவேற்பறையில் உட்கார வைத்து விருந்தோம்பல் செய்து அனுப்பி விடுகிறோம். மற்றவர்கள் அனைவரையும் வீட்டு வாயிலோடு அனுப்பி விடுகிறோம் அல்லவா?

அதேபோன்று இதயம், சிறுநீரகம், கண்கள், மூளை என உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கக்கூடிய சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே தெந்து கொண்டு, அதை வாயிலோடு அனுப்பி விடுவதே புத்திசாலித்தனம்.

இன்னும் வலியுறுத்தி சொல்லப்போனால், "சர்க்கரை' என்ற வார்த்தை நாக்கோடு நின்று விட வேணடும்; உடலுக்குள் சென்று நோயை ஏற்படுத்த அனுமதிக்கவே கூடாது.

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் காரணமாக ரத்த சர்க்கரை அளவு பசோதனை மூலம் சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே தெந்து கொள்ளும் வசதிகள் உள்ளன.

இனி, சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே தெந்து கொண்டு வராமல் தடுத்துக் கொள்வது எப்படி, சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்துவது எப்படி ஆகியவை குறித்து விவான அலசல்:

1. உடலில் சர்க்கரை நோய்க்கு தொடர்புடைய உறுப்பு எது? அதன் வேலை என்ன?

சர்க்கரை நோய்க்கு தொடர்புடைய உறுப்பு கணையம். கணையத்தில் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. நாம் சாப்பிடும் சாதம் உள்பட பல்வேறு உணவு மூலம் ரத்தத்தில் "குளுக்கோஸ்' எனப்படும் சர்க்கரை சேருகிறது;

இவ்வாறு சேர்ந்த குளுக்கோûஸ ஆற்றலாக மாற்றும் வேலையை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற இயற்கை ஹார்மோன் செய்கிறது. இது ஆயுள்காலம் முழுவதும் செவ்வனே நடைபெறுகிறது.

2. சர்க்கரை நோயை முன்கூட்டியே தெந்துகொள்ளும் சோதனை என்ன?

ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்பதைத் துல்லியமாகத் தெந்துகொள்ள பயன்படுவது குளுக்கோஸ் குடிக்கக் கொடுத்துச் செய்யப்படும் "ஓ.ஜி.டி.டி.' (

OGTT - Oral Glucose Tolerance Test ) பசோதனையாகும்.

கண்ணாடி டம்ளல் நிரப்பப்பட்ட 300 மில்லி லிட்டர் சுத்தமான நீல், 75 கிராம் குளுக்கோûஸ கலந்து வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுத்துச் செய்யப்படும் ஓ.ஜி.டி.டி. ரத்தப் பசோதனையில், ரத்த சர்க்கரை அளவு 100 மில்லிகிராம் சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு "சர்க்கரை நோய்' இல்லை என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் செய்யப்பட்ட இச் சோதனையில் ரத்த சர்க்கரை அளவு 100 மில்லிகிராம் சதவீதத்துக்கும் 125 மில்லிகிராம் சதவீதத்துக்கும் இடையில் இருந்தால், சர்க்கரை நோயை நோக்கி உங்களது பயணம் தொடங்கி விட்டது என்று உஷார் அடைய வேண்டும்;

மாறாக, ரத்த சர்க்கரை அளவு 126 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டி விட்டாலே, துரதிர்ஷ்டவசமான "சர்க்கரை நோயாளி' என்ற மகுடத்தை நீங்கள் சூட்டிக் கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் செய்யப்பட்ட ஓ.ஜி.டி.டி. பசோதனையில் ரத்த சர்க்கரை அளவு இயல்பானதைவிட அதிகமாக இருந்தாலே, கணையத்தில் இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லை என்று கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு சோதனை செய்யப்பட்டு அதிக ரத்த சர்க்கரை அளவு உள்ள நிலைக்கு "இம்பர்ட் ஃபாஸ்ட்டிங் குளுக்கோஸ்' (

I.F.G. - Impaired Fasting Glucose ) என்று பெயர்.

குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்பட்ட ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவுப் பசோதனையில், ரத்த சர்க்கரை அளவு 140 மில்லிகிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருந்தால் இயல்பானது;

ஆனால் ரத்த சர்க்கரை அளவு 140 மில்லிகிராம் சதவீதத்துக்கு அதிமாகவும், 200 மில்லிகிராம் சதவீதத்துக்குக் குறைவாகவும் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய நிலைக்கு "இம்பர்ட் குளுக்கோஸ் டாலரன்ஸ்'

(I.G.T. - Impaired Glucose Tolerance) என்று பெயர். கணையத்தில் இன்சுலின் சுரப்பு "திணறுகிறது' என்று அர்த்தம். இன்சுலினை இஷ்டம்போல் இனி காலி செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சோதனைக்கு 8 அல்லது 12 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது. குளுக்கோஸ் பருகுதல், 2 மணிநேரத்திற்கு பிறகு ரத்தப் பசோதனை.

3. சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது அல்லது சர்க்கரை நோய் ஏற்பட்டிருப்பது பசோதனையில் தெந்தவுடன் புத்திசாலிகள் செய்ய வேண்டியது என்ன?

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அல்லது சர்க்கரை நோய் இருப்பதாகத் தெந்தவுடன், உணவு முறை மாற்றம் - உடற்பயிற்சி மூலம் இன்சுலின் சுரப்பை நீங்கள் எப்படி முறைப்படுத்துகிறீர்கள் என்பதில்தான் உங்களது புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது.

இன்சுலின் சுரப்பைச் சீரமைப்பதில் உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி ஆகியவை "கதாநாயகர்கள்'. இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் வீறு நடை போட்டால், சர்க்கரை நோய் டாக்டர்-மருந்துக்கு வேலையில்லாமல் போகும்.

4. சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது

(Pre-Diabetes) எனத் தெய வந்த உடனேயே, வராமல் தடுத்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்க வேண்டியது ஏன்?

ஆரோக்கியமாக உள்ளவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் 1.5 மடங்கு அதிகம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 2 முதல் 4 மடங்கு அதிகமாகிறது. கவலைப்படாதீர்கள்.

உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம் மூலம் பெயவர்களுக்கான இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம்.

உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைத்தால் 2-வது வகை சர்க்கரை நோயை 58 சதவீதம் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம் என ஆய்வுகள் தெவிக்கின்றன.

தினமும் 30 நிமிஷம் உடற்பயிற்சி செய்யும் நிலையில், 5 முதல் 10 சதவீத அளவுக்கு உடல் எடை குறையும். சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு, வாழ்க்கை முறை மாற்றம் மூலம் ரத்த சர்க்கரை அளவை மீண்டும் இயல்பான அளவுக்குக் கொண்டு வரவும் முடியும்.

5. சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதா

(Pre-Diabetes) என எந்த வயதினர் சோதனை செய்து கொள்ள வேண்டும்?

உங்களுக்கு 30 வயதாகி அதிக எடைப் பிரச்னை உள்ளதா? அடுத்த முறை டாக்டடம் செல்லும்போது ரத்த சர்க்கரை அளவைப் பசோதனை செய்து கொள்வது அவசியம்.

இயல்பான எடையுடன், நீங்கள் 40 வயதை எட்டிவிட்டீர்களா? உங்களது டாக்டர் பந்துரைக்கும் நிலையில் ரத்த சர்க்கரை அளவைப் பசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் தாத்தா-பாட்டி, தந்தை-தாய், மாமா, அத்தை என குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே சர்க்கரை நோய் இருத்தல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை, ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருத்தல், அதிக எடையுடன், அதாவது 3.5 கிலோகிராமுக்கு அதிகமாக உங்களுக்கு (தாய்க்கு) குழந்தை பிறந்திருத்தல்.....

இத்தகையோர் சர்க்கரை நோய் உள்ளதா என்பதற்கான ரத்தப் பசோதனையைச் செய்து கொள்வது அவசியம்.

6. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருந்தால், அறிகுறிகள் ஏதும் தெயுமா?

அடிக்கடி தாகம் ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருத்தல், காயம் ஆறாமல் இருத்தல், பார்வை மங்குதல், காரணமின்றி சோர்வு ஆகியவை சர்க்கரை நோய்க்கான பொதுவான அறிகுறிகள். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்களுக்கு, இத்தகைய அறிகுறிகள் எதுவும் வெளிப்படுவதில்லை.

இதனால் சோதனை செய்து கொள்ளாமலே, சர்க்கரை நோய் இருப்பது தெயாமலேயே லட்சக்கணக்கானோர் உள்ளனர். மேலே சொன்ன அறிகுறிகள், உடலுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்பதால், சர்க்கரை நோய்க்கான சோதனை செய்து கொள்ளாதவரை அதன் விளைவுகளை பலர் உணருவதில்லை.

7. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருந்தால், சிகிச்சை என்ன?

இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதால்தான், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ள நிலையிலேயே எச்சக்கையாக இருப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. எச்சக்கையாக இருங்கள் என்று சொல்வதாலேயே, உங்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும் என்று பொருள் கொள்ளாதீர்கள்.

கொழுப்புச் சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவது, நெய்-இனிப்பு உள்ளிட்ட கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் எடையைக் குறைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக கீரைகள் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பு சீராகி, ரத்த சர்க்கரை அளவு இயல்பானதாகி, நீங்கள் வேலை செய்ய போதுமான ஆற்றல் கிடைக்கும். தேவைப்படும் நிலையில் உணவு ஆலோசனை நிபுணன் யோசனையைப் பெற்று, உங்களது உணவுத் திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

எளிய உடற்பயிற்சி எது?

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது தெய வந்தவுடனாவது, தினமும் "வாக்கிங்' செல்லத் தொடங்குங்கள். இரவு சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தினருடன் டி.வி. பார்க்காமல், அனைவரும் "வாக்கிங்' செல்லுங்கள்.

வளர்ப்பு நாயுடனும் "வாக்கிங்' செல்லலாம். உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஏற்படாமல் தடுக்கலாம். சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ள நிலையிலேயே, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சில டாக்டர்கள் மருந்துகளை பந்துரைப்பார்கள்.

இவ்வாறு மருந்துகளை பந்துரைத்தால் அவற்றைச் சாப்பிடத் தவறாதீர்கள்.

8. சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதை சோதனை மூலம் கட்டாயம் தெந்து கொண்டுதான் ஆக வேண்டுமா? சர்க்கரை நோய் இருப்பது தெயவந்த பிறகு, சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதாதா?

இங்குதான் மருத்துவ அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதமே உள்ளது. நாம் சாப்பிடும் உணவு காரணமாக உருவாகும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஆற்றலாக மாற, கணையத்தில் இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்;

இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டுமானால், பீட்டா செல்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

பசோதனை செய்து கொள்ளாமல், உடலுக்குள் ஓசையின்றி சர்க்கரை நோய்க்கான பாதிப்பு தொடங்கி விடும் நிலையில், பீட்டா செல்களிலும் பாதிப்பு ஆரம்பித்து விடும்.

ஆரம்ப நிலையில் சோதனை செய்து கொள்ளாமல், திடீர் என சர்க்கரை நோய் இருப்பது தெயவரும் நிலையில் இன்சுலினின் "பிரம்மாவாக' விளங்கும் பீட்டா செல்களில் பாதிப்பு ஏற்கெனவே தொடங்கியிருக்கும்.

பின்னர் என்னதான் தலைகீழாக குட்டிக்கரணம் அடித்தாலும், பீட்டா செல்களின் பாதிப்பைச் ச செய்ய முடியாது - இன்சுலின் சுரப்பில் ஏற்பட்ட குறைபாட்டையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது.

மாறாக, சோதனை செய்துகொண்டு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதைத் தெந்துகொண்டு, உணவு முறை மாற்றம்-உடற்பயிற்சியை நீங்கள் ஆரம்பித்துவிட்டால் பீட்டா செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.

எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பானதைவிட அதிகக்கத் தொடங்கி விடும் நிலையிலேயே, ஓசையின்றி கணையத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஆரம்பித்து விடுகிறது என்பதைப் புந்து கொள்ளுங்கள்.

9. சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதை முன்னரே வெளிப்படுத்தும் "ஓ.ஜி.டி.டி.' பசோதனை முடிவுகள் மூலம் தெயவரும் பொதுவான விஷயங்கள் என்ன?

ஓ.ஜி.டி.டி. பசோதனையில், வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பசோதனையில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல்

IFG-Impaired Fasting Glucose) , குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்பட்ட பசோதனையில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல் (

IGT-Impaired Glucose Tolerance ) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பசோதனையில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பிரச்னை (ஐ.எஃப்.ஜி.) ஆண்களில் அதிகம்;

குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்படும் பசோதனையில் அதிக ரத்த சர்க்கரை அளவு பிரச்னை (ஐ.ஜி.டி.) பெண்களில் அதிகம். ஆனால், இரண்டு விதமான பிரச்னைகள் காரணமாகவும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

சர்க்கரை நோய் வந்தவர்களில் 60 சதவீதம் பேருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஏற்பட்டது ஆய்வுகள் மூலம் தெய வந்துள்ளது.

எனவே சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே தெந்து கொண்டு தடுப்பு நடவடிக்கையை எடுப்பது அவசியம்.

10. சர்க்கரை நோய் உள்ளதா எனப் பசோதனை செய்துகொள்ள நேரம் இல்லை என்று சொல்வோர் என்ன செய்யலாம்?

குடும்பத்தைச் சேர்ந்த பெயவர்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவியாக இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் வருவது வழக்கமாக உள்ளது. முதுமையை எட்டியவர்களுக்கு உதவவும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இத்தகையோர் குடும்பத்தினரை அடுத்த முறை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, தாமும் எதுவும் சாப்பிடாமல் சென்று முழுமையான ஓ.ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவைப் பசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

நேரம் இல்லை என்று சொல்வோருக்கு இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றாகும்.

11. சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்ள "சூப்பர் ஐடியா' சொல்லுங்களேன்?

கவுண்ட்டல் பணம் கொடுத்து பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது போன்று, ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்து சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்ளும் "மந்திரங்கள்' எதுவும் இல்லை.

முதலில் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதா என்பதை ஓ.ஜி.டி.டி. பசோதனை (குளுக்கோஸ் பசோதனை) மூலம் தெந்து கொள்வது அவசியம்.

ஓ.ஜி.டி.டி. பசோதனையில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகத் தெய வரும் நிலையில், ஏற்கெனவே சொன்னபடி உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைத் தொடர்ந்து பராமத்தல், கொழுப்புச் சத்து இல்லாத உணவு வகைகளைக் கொண்ட உணவு முறை மாற்றம், வாக்கிங் உள்பட தினமும் உடற்பயிற்சி ஆகியவற்றை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது முன்கூட்டியே தெய வந்துவிட்டதை வரமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் உடல் முழுவதும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரை நோயை முளையிலேயே கிள்ளி எறிய எழுப்பப்படும் "எச்சக்கை மணி'தான் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை.

டாக்டன் பந்துரைப்படி எச்சக்கையாக இருந்து தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நிலையில் நீங்கள் எல்லோரையும் பார்த்து "வாழ்க வளமுடன்' என தன்னம்பிக்கையுடன் கூற முடியும்.

குளுக்கோஸ் கொடுத்துச் செய்யப்படும் ரத்த சர்க்கரை பசோதனை (ஓ.ஜி.டி.டி.) அளவுகள்

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு குளுக்கோஸ் கொடுத்து 2 மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு

ரத்த சர்க்கரை அளவு 100 மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் இயல்பானது (சபாஷ்).

ரத்த சர்க்கரை அளவு 140 மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் இயல்பானது. (மீண்டும் சபாஷ்)

ரத்த சர்க்கரை அளவு 100 மில்லிகிராம் - 125 மில்லிகிராம் இருந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. (எச்சக்கை மணி). ரத்த சர்க்கரை அளவு 140 மில்லி கிராமுக்கும் 199 மில்லிகிராமுக்கும் இடையில் இருந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. (மீண்டும் எச்சக்கை மணி).

ரத்த சர்க்கரை அளவு 126 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோயாளி.  (இனி வாய்க்குப் பூட்டு). ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் ஏற்கெனவே வந்துவிட்டது. (ஆயுள்கால நண்பன்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

SCROLL FOR NEXT