மருத்துவம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையில்  புதிய கண்டுபிடிப்பு!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே ஃபைப்ரோசிஸ் மூலம் சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து தடுக்க முடியும்

கார்த்திகா வாசுதேவன்

தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் பழுதடையாமல் தடுக்க புதிதாக மரபணுக்குழு ஒன்றை நியூயார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு  சில வருடங்களுக்குப் பின் ஃபைப்ரோஸிஸ் மூலமாக சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  செய்துகொள்பவர்களுக்கு இப்படிப்பட்ட ஆபத்தான நிலை வரும் முன் அதைக் கண்டறிய இந்த புதிய மரபணுக்கள் உதவுகின்றன என்று நியூயார்க் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பின் படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே முதல் 3 மற்றும் 12 மாதங்களுக்குப் பின் திசு ஆய்வு (பயாப்ஸி) மேற்கொள்ளப்பட்டது. இந்த திசு மாதிரிகளை (பயாப்ஸி சாம்பிள்)’மைக்ரோ அரே’எனும்  நுண்வரிசை  ஆய்வு முறையில் சோதித்த போது  இவற்றில் புதிதாக காணப்படும் மரபணு மற்றும் புரதங்களின் எண்ணிக்கை ஒரு சீராக கணக்கிடப்பட்டது. இந்த மரபணு எண்ணிக்கை முந்தைய  திசு ஆய்வு முடிவுடன் ஒப்பிடப்பட்டு  குரோனிக் அலோக்ராப்ட் டேமேஜ் இன்டெக்ஸ் ஸ்கோர் (ஆங்கிலத்தில் CADI- பாதிக்கக் கூடிய அளவிலான திசு வளர்ச்சி கணக்கீடு) கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே ஃபைப்ரோசிஸ் மூலம் உறுப்பு செயலிழக்கச் செய்யத்தக்க புதிய மரபணுக்காரணிகள் எவை எனும் முடிவுக்கு வர முடிந்தது. 

தங்களது ஆய்வு முடிவை லான்சட் மருத்துவ இதழில் வெளியிட்ட நியூயார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனை தலைமை மருத்துவரும் இந்த ஆய்வுக்கு குழுவின் தலைவருமான மருத்துவர் பார்பரா மர்பி ’எங்களது ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ள புதிய மரபணுக்குழு எண்ணிக்கை மாறுபாடுகளைக் கொண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே பைப்ரோசிஸ் மூலம் சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT