முகப்பு
மருத்துவம்

சளி, இருமல், காய்ச்சலைப் போக்க உதவும் அற்புத கசாயம்

சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கசாயம் பயனளிக்கும். 

Updated On : 2 ஏப்ரல், 2020 at 5:12 PM
பகிர்:

சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கசாயம் பயனளிக்கும். 

தேவையான பொருட்கள்

முசுமுசுக்கைக்  கீரை      -  ஒரு கைப்பிடி

Advertisement

தூதுவளைக் கீரை.           -  ஒரு கைப்பிடி

திப்பிலி                 -  5

மிளகு                     -  10

சுக்கு                     -  ஒரு துண்டு

அதிமதுரம்           -  ஒரு துண்டு

சித்தரத்தை         - சிறிதளவு

மஞ்சள் தூள்      -  2 சிட்டிகை

செய்முறை

முதலில் முசுமுசுக்கைக் கீரை, தூதுவளைக் கீரை ஆகியவற்றை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். திப்பிலி, மிளகு, சுக்கு, அதிமதிரம், சித்தரத்தை அனைத்தையும் ஒன்றிரன்டாக தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை மற்றும் தட்டி வைத்துள்ள பொருட்களையும் அதனுடன்  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 400 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை தினமும்  காலையில் தயார் செய்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை 60 மி.லி அளவு என குடித்து வரவும். மேலும் இந்த கசாயத்தை வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேளையாவது குடித்து வந்தால் அவர்களின்  உடலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். 

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell: 96557 58609,75503 24609

Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.