மருத்துவம்

சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுகிறதா? இதோ அருமருந்து!

கோவை பாலா

கால் வீக்கம் மற்றும் ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேற்றலுக்கு இந்த கசாயம் அருமருந்தாக அமையும். பயன்படுத்தி பாருக்களேன். 

தேவையான பொருட்கள்

முளைக்  கீரை     -  ஒரு கைப்பிடி

சிறு கீரை.             -  ஒரு கைப்பிடி

சீரகம்.                    -   5 கிராம்

மஞ்சள் தூள்        -  2 சிட்டிகை

செய்முறை

முதலில் முளைக் கீரை, சிறு கீரை ஆகியவற்றை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை, சீரகம் மற்றும்  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் கால் வீக்கம் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும் குறைபாடு உள்ளவர்களுக்கு  அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை தினமும்  காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தயார் செய்து குடித்து வரவும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT