மருத்துவம்

அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு அற்புத கசாயம்!

தினமணி

நாம் எதற்கெடுத்தாலும் மருத்துவரை அணுகுவதைத் தவிர்த்து இயற்கை முறையில் சிகிச்சைகளை நாமே எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில், இன்றைய உணவே மருந்து பகுதியில் நெஞ்சு எரிச்சலுக்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 

தேவையான பொருட்கள்

குப்பைக் கீரை  -  ஒரு கைப்பிடி

ஓமம்                   -  10 கிராம்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு

செய்முறை

முதலில்  குப்பைக்  கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள குப்பைக் கீரையையும் அதனுடன் ஓமம் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 100 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம்  நெஞ்சு எரிச்சலை  குணப்படுத்த உதவும். நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்படும் பொழுது இந்தக் கசாயத்தை தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் சார்ந்த குறைபாடு நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT