முகப்பு
மருத்துவம்

 தீராத மலச்சிக்கலை போக்க உதவும் கசாயம்

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

Updated On : 20 பிப்ரவரி, 2020 at 3:58 PM
பகிர்:


தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி

கடுக்காய்.                    -  2

செய்முறை

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் அதனுடன் கடுக்காய் தோலை நன்கு தட்டி சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்
இந்தக் கசாயம்  தீராத மலச்சிக்கலுக்கு அருமருந்து. தினமும் மாலை வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால்  காலையில் மலம் எந்த விதமான சிக்கலின்றி தாராளமாக வெளியேறும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  

Covaibala15@gmail.com  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.