முகப்பு
மருத்துவம்

மலம் தாராளமாகக் கழிந்து குடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற உதவும் கசாயம்

இந்தக் கசாயம் குடலில் உள்ள கிருமிகளை ஒழிக்க உதவும். குடல் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள்..

Updated On : 19 மார்ச், 2020 at 3:38 PM
பகிர்:

தேவையான பொருட்கள்

பிண்ணாக்குக் கீரை         -  ஒரு கைப்பிடி

நிலாவரை இலை.             -   ஒரு கைப்பிடி

Advertisement

மஞ்சள் தூள்                       -  சிறிதளவு

செய்முறை

முதலில்  பிண்ணாக்குக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பிண்ணாக்குக் கீரை, நிலாவரை இலை மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 100 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் குடலில் உள்ள கிருமிகளை ஒழிக்க உதவும். குடல் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும காலை  வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மலம் நன்றாக வெளியேறி குடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றும். ஒரு வாரமாவது குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.