முகப்பு
மருத்துவம்

பித்தம், மயக்கத்திலிருந்து விடுபட உதவும் அருமருந்து

அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவவும், பித்தத்தினால் உண்டாகக்கூடிய கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் சூரணம் பயன்படும். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
வல்லாரைக் கீரை
பகிர்:

அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவவும், பித்தத்தினால் உண்டாகக்கூடிய கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் சூரணம் பயன்படும். 

தேவையான பொருள்கள்

வல்லாரைக் கீரை ( உலர்ந்தது) - 100 கிராம்

Advertisement

முசுமுசுக்கைக் கீரை ( உலர்ந்தது) - 100 கிராம்

நெல்லி வற்றல்.         -    100 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு வல்லாரைக் கீரை மற்றும் முசுமுசுக்கைக் கீரை ஆகியவற்றை  எடுத்து எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து மேற்கூறிய அளவு  எடுத்துக் கொள்ளவும். நெல்லி வற்றல்  எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் அதிகப்படியான பித்த தன்மை உள்ளவர்களுக்கும் , பித்தத்தினால் உண்டாகக் கூடிய கிறுகிறுப்பு மற்றும் மயக்க உணர்வு குறைபாட்டினால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய  இந்த சூரணத்தை தயார்செய்து  தினமும் அதிகாலை வேளை   இரண்டு கிராம் அளவு எடுத்து   சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments