நாய்க்கடிக்கு தடுப்பூசி 
மருத்துவம்

இந்தியாவில் போலி வெறிநாய்க் கடி மருந்துகள் புழக்கம்! எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

இந்தியாவில் போலி வெறிநாய்க் கடி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில், அபயரெப் என்ற வெறிநாய்க் கடி மருந்தின் போலிகள் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, அவர்கள் நாட்டு மக்களுக்கு, வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெளியிட்டிருக்கு அறிவுறுத்தலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் இந்தியா சென்று, அபயரெப் (Abhayarab) வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கிடைத்திருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய தடுப்பூசி நிறுவனத்தால், போலி வெறிநாய்க்கடி மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, உண்மையான மருந்தின் எண் வரிசைகளைக் கொண்ட போலி மருந்துகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியிருந்தது. தற்போது ஆஸ்திரேலியா விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில் 2023ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறி நாய்க்கடிக்கு சிறந்த மருந்து என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அபயரெப் பெயரில் போலி மருந்துகள் வேதியியல் மாறுபாடுகள், பெட்டகம் மற்றும் அடையாளப்படுத்துவதில் சற்று மாறுபட்டு விற்பனைக்கு வருகின்றனவாம். தில்லி, மும்பை, அகமதாபாத், லக்னௌ உள்ளிட்ட நகரங்களில் போலி மருந்துகளின் விற்பனை அதிகம் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், அது நாட்டில் எந்த அளவுக்கு புழக்கத்தில் இருக்கிறது என்பதன் உண்மையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றே நம்பப்படுகிறது.

வெறி நாய்க்கடி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரேபிஸ் வைரஸ் பரவினால், அது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மரணத்தை விளைவிக்கும். எனவே, போலி மருந்துகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு, ரேபிஸ் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

அதேவேளையில், தனிமனிதர்களால், போலி மருந்துகளைக் கண்டறிய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது, இந்தியாவில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் யாரேனும் அபயரப் அல்லது எந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டோம் என்று தெரியாமல் இருந்தால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இனி இந்தியா செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், முழுமையான வெறிநாய்க்கடி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு புறப்படவும், ஒருவேளை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நேர்ந்தால், தடுப்பூசி மற்றும் மருந்து சீட்டை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தெரு நாய்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்!

'ஜன கண மன' சந்தித்து வரும் சவால்கள்!

விமான விபத்து! பலியான லிபியா தலைமைத் தளபதிக்கு துருக்கி ராணுவம் மரியாதை!

நல்லவேளை! சோதனை ஓட்டத்தின்போதே இடிந்து விழுந்த ரோப்கார்.. இது பிகார்!

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT