குழந்தைகள் நலம்

குழந்தைகள் வளர்ச்சிக்கான புரதச் சத்து நிறைந்த ஊட்டச்சத்து

கோவை பாலா

 
முளைகட்டிய தானியக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
முளை விட்ட கம்பு - 50 கிராம்
முளைவிட்ட கோதுமை - 50 கிராம்
முளைவிட்டப் பச்சைப் பயிறு - 50  கிராம்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
உலர் திராட்சை - 50  கிராம்
பனங்கற்கண்டு - 150  கிராம்

செய்முறை : முதலில் கம்பு, கோதுமை மற்றும் பச்சைப் பயிறு ஆகியவற்றை ஊற வைத்து பின்பு முளைகட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் முளைகட்டிய பயிறு, பேரீச்சம் பழம், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து  இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கஞ்சி பதத்தில் காய்ச்சி கொள்ளவும். அதனுடன் பனங்கற்கண்டை தூளாக்கி கஞ்சியுடன் சேர்த்து  சிறிது கொதிக்க வைத்து  இறக்கிக் கொள்ளவும். மேற்கூறிய அளவுகளை அவரவர் தேவைகளுக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்.

பயன்கள் : இப்படி தயார் செய்த கஞ்சியில் அதிக புரதச் சத்து நிறைந்துள்ளது.ஆகையால் இந்தக் கஞ்சியை சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவரும் உன்னத் தகுந்த உன்னதமான கஞ்சி. மேலும் இந்தக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு ஊட்டத்தைத் தரும் அற்புதமான உணவாக அமையும்.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT