செய்திகள்

தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!!

காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக கோகோ-கோலாவை தான் குடிப்பாராம். இவருடைய இந்த வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது.

தினமணி

ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா-வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது.

மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது.

இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.

இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.

தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள். 

இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT