செய்திகள்

கண்ணில் ரத்த அடைப்பை நீக்கும் நவீன சிகிச்சைஅறிமுகம்

தினமணி

அல்ட்ரா சவுண்டைப் பயன்படுத்தி கண்ணில் ரத்த அடைப்பை நீக்கும் நவீன சிகிச்சை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனைத் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியது: ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற நவீன கருவி மூலம் அல்ட்ரா சவுண்டைப் பயன்படுத்தி கண்ணில் உள்ள ரத்த அடைப்பை எளிதாக நீக்க முடியும். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா என்பவர் ரத்த அழுத்தம் காரணமாக இடது கண் பார்வையை இழந்தார். அவருக்கு அல்ட்ரா சவுண்டைப் பயன்படுத்தி அண்மையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவருக்கு இடது கண்ணில் பார்வை மீண்டும் வந்துள்ளது. 
சர்க்கரை நோய், விபத்து போன்றவற்றால் கண்ணில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT