செய்திகள்

தொடர்ந்து மூக்கில் ரத்தம் வடிகிறதா?

கோவை பாலா

அறிகுறிகள் : நமது உடம்பில் ரத்தம் சீராக இயங்க வேண்டுமென்றால் துவர்ப்பு சுவை தேவை. இந்த சுவை பற்றாக்குறையினால் மூக்கு, வாய் மற்றும் நாக்கு பலவீனம் அடையும்பொழுது உண்டாகும் மூக்கில் ரத்தம் வடிதல், சிவந்த நிறமுடைய வாய் மற்றும் நாக்கில் வெண்மை நிற படிவு குறைபாட்டிலிருந்து நீங்க..

மண்டலம் - ரத்த ஒட்ட மண்டலம்
காய் - வாழைக்காய்
பஞ்சபூதம் - நீர்
மாதம் - பங்குனி
குணம் - நற்குணங்கள் கிரகிப்பு
ராசி /லக்கினம் -  மீனம் 

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  இ , கே )

தீர்வு : வாழைக்காய் (சிறியது), கொத்தவரங்காய் (5) ,வெற்றிலை (2), புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை இவை அனைத்தும் (சிறிதளவு), மிளகு (2) இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி அதனுடன் சிறிதளவு உப்பு (தேவைப்பட்டால்) சேர்த்துக் கொண்டு காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT