செய்திகள்

உங்கள் தலைமுடி நீளமாக வளர வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? 

நார்ச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

கோவை பாலா

முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக் காய்

சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு : முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காய் இரண்டையும் ஒருநாள் கீரை மற்றும் மறுநாள் முருங்கைக்காய் என முறைப்படுத்தி நீராவியில் வேகவைத்து பின்பு பொறியலாக செய்து அதனுடன் தேங்காயை நிறைய துருவி போட்டு  காலை வேளை உணவில் அதிகமாக சாப்பிடவும்.

வெட்டிவேர் (10 கிராம்), சுருள் பட்டை (100 கிராம்), வெந்தயம் (2 ஸ்பூன்), விளாம் மர இலை (50 கிராம்) இந்த நான்கையும் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவி வந்தால்  முடி கொட்டுவது நிற்பதுடன் நீளமாக முடி வளரும்

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT