செய்திகள்

இதய நோய் வருவதற்கான அடிப்படை முதன்மைக் காரணங்கள் எவை?

இதய வால்வுகளில் கெட்ட கொழுப்புகள் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதை மருத்துவ மொழியில் 'ஆர்த்ரோக்ஸ்கிளிரோஸிஸ் ' என்பார்கள்.

RKV

ஆரோக்ய உணர்வு இல்லாத நமது முறையற்ற உணவுப் பழக்கங்களால் சிறிது சிறிதாக உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் இதய வால்வுகளின் சுவர்களில் (ஆர்ட்ரிஸ்) ஒரு படலம் போலப் படியத் துவங்குகின்றன. இந்தப் படலங்கள் மெல்லியதாகத் தான் இருக்கும். ஆனால், நாள்பட, நாள்பட படலங்கள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்து அவற்றின் தடிமன் அதிகரித்துக் கொண்டே செல்கையில் இதய வால்வுகளில் ரத்தம் தடையின்றிச் சென்று வர மிகப்பெரிய தடையாகி இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதை மருத்துவ மொழியில் 'ஆர்த்ரோக்ஸ்கிளிரோஸிஸ் ' என்பார்கள்.

அதாவது மெல்லிய படலங்களாக இதய வால்வுகளில் படியத் தொடங்கும் கொழுப்புகள் அல்லது கொலஸ்ட்ரால் ஒரு கட்டத்தில் தடிமன் அதிகரித்து இதய வால்வுகளை அடைத்துக் கொண்டு இதயத்துக்கு வரும் ரத்த ஓட்டத்தை தடை செய்யத் தொடங்கி விடும். இதயத்திற்கு வரும் ரத்த ஓட்டம் தடையானால் ரத்தச்சுத்திகரிப்புக்கும் தடை ஏற்பட்டு இதயத்தின் இயல்பான இயங்குமுறை தடுக்கப் படுகிறது. இதய நோய் வருவதற்கான முழு முதல் காரணம் இது தான்.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதய வால்வுகளின் சுவர்களின் கொழுப்பு படியாமல் தடுக்கும் வண்ணம் நமது உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, மருத்துவர் ஆலோசனையுடன் எளிய உடற்பயிற்சிகள் சிலவற்றை நாள்தோறும் செய்து வந்தோமெனில் இந்த நிலை வராமல் தடுக்கலாம்.

ஆர்த்ரோஸ்கிளிரோஸிஸ் மட்டுமல்ல, சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தமும் கூட இதய நோய்க்கு அடிப்படைக் காரணமாகி விடுகிறது. ஒபிஸிட்டி, உயர் ரத்த சர்க்கரை, அதிக கொழுப்புச் சத்து போன்றவைகளாலும் பலருக்கு இதயநோயின் தாக்கம் ஏற்படுகிறது.

Image courtesy: TheHealthSite.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT