செய்திகள்

சீழுடன் வெளியேறும்  புண் மற்றும் ஆறாத புண்கள்  குணமாக

பீர்க்கங் கொடியின் இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்கள் மற்றும் சீழுடன் வெளியேறும் புண்களை

கோவை பாலா

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன.

தீர்வு : பீர்க்கங் கொடியின் இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்கள் மற்றும் சீழுடன் வெளியேறும் புண்களை கழுவி வந்தாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.

ஒரு முழு பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முருங்கை விதை (முற்றின முருங்கை விதைக்குள்ளே உள்ள வெண்மை நிறம் கொண்ட பருப்பு 10 எண்ணிக்கை) அளவு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி ஜூஸாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு

காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். ஆகாயத் தாமரை இலையுடன் வினிகர் சேர்த்து வேக வைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அழுகிய புண்களில் வைத்துக் கட்டிவந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT