செய்திகள்

மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க

நந்தியாவட்டப் பூ (50 கிராம்), களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் ஊற வைத்து

கோவை பாலா

நந்தியாவட்டப் பூ (50 கிராம்), களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் ஊற வைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் பூ, சதை வளர்ச்சி, பலவித கண் படலங்கள், பார்வை மந்தம் போன்றவை நீங்கும்.

பல் வலி குணமாக : நந்தியாவட்டை  ஒரு துண்டு வேரை எடுத்துக் கொண்டு அவற்றை வாயில் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். இவ்வாறு செய்தால் அனைத்து பல் வலிகளும் குணமாகும்.

வயிற்றுப் புழுக்கள் வெளியேற : நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவற்றை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் முற்றிலுமாக  வெளியாகும்.

மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க : நந்தியாவட்டை வேர்த் தோலை எடுத்து நன்னாரி, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை கஷாயமாக்கி அந்த கஷாயத்தில் இந்த வேர் தோலை ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுது போல் அரைத்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

With Love Movie Review - நினைவெல்லாம் காதல்.. | Abishan Jeevinth | Anaswara Rajan | Dinamani Talkies

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவு

நினைவெல்லாம் காதல்... வித் லவ் - திரை விமர்சனம்!

டிரம்ப்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை!

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT