சாய்பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம் இதுதான்! (விடியோ)
சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு படவுலகில் பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது
சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு படவுலகில் பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல எந்தப் படமும் சாதனை படைக்கவில்லை. சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது கன்னத்தில் உள்ள பருக்கள் மட்டுமல்ல. மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ் சிவப்பாக இருப்பதும்.. அவர் சிரிக்கும்போது கன்னம் இன்னமும் சிவப்பாவதுதான்.
இப்படி கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ஒரு விநோதமான தோல் குறைபாடுதானாம். அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'. கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள் விரிவடையும் போது அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் தூக்கலாக தெரியும். அதனால், முகத்தசைகளில் கன்னங்கள். மூக்கு பகுதியில் இந்த சிவப்பு நிறம் பளிச்சென்று தெரியும்.
படப்பிடிப்பின் போது சிரிக்கிற போதும், நடிக்கும் போதும் போட்டோ எடுக்கும் போதும், சாயின் கன்னம் தானாகவே சிவந்துவிடும். அப்படி சிவப்பது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்து விடுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.