செய்திகள்

கை, கால், இடுப்பு வலிகளைத் தீர்க்கும் அருமருந்து!

கோவை பாலா

முடக்கத்தான் கீரை ரசம்

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரைக் காம்பு - 5 கைப்பிடி
எலுமிச்சை பழம் -  1
தக்காளி - 1
சீரகம் - 3 ஸ்பூன்
மிளகு -   அரை ஸ்பூன்
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
நெய் -  1  ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
தண்ணீர் - 4 டம்ளர்

செய்முறை

முடக்கத்தான் கீரைக் காம்பை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து நன்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் நெய்விட்டு அதில் சீரகம் , மிளகு ஆகியவற்றை பொடியாக்கிப் போட்டு வறுத்து கொள்ளவும். பின்பு அதனுடன் வெந்த முடக்கத்தான் கீரைக் காம்பு ரசத்தைச் சேர்த்து தக்காளியையும் கரைத்துச் சேர்க்கவும்.பிறகு பூண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை அரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தயார் செய்து வைத்து அதிகாலை வேளையில் ஒரு டம்ளர் அளவு வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த ரசத்தை வயதானவர்களுக்கு மாதம் ஒரு முறை கொடுத்தால் போதுமானது.

பயன்கள் : இதனை குடிக்கும் பொழுது முதலில் பேதியாகி அதிகப்படியான பித்தம் வெளிப்படும். மேலும் கை, கால், இடுப்பு வலிகள் அனைத்திற்கு தீர்வாக அமையும். வயதானவர்களுக்கு உண்டாகும் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படும் முடக்கத்தான் கீரை ரசம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT