செய்திகள்

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடை அதிகரிக்க ஒரு வழி இருக்கு!

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன

கோவை பாலா

காய் : தேங்காய் + கேரட்

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு

தேங்காய்  துருவல் (1 கைப்பிடி)
கேரட் (150 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
வெள்ளை மிளகு (10 கிராம்)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)

செய்முறை : முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொண்டு பின்னர் கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி கொள்ளவும் இரண்டையும்  ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய், வெள்ளை மிளகு, மல்லித்தழை இவை மூன்றையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருமனாகும்.

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறிவரும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பார்வை... மோக்‌ஷா கெளஷால்!

புதிதாய் வெட்கம்... குஷி தூபே!

மின்னும் மிர்ணாளினி!

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

SCROLL FOR NEXT