பல் மருத்துவத் துறையில் பல் மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, அத்துறையில் தொழில் நுட்ப உதவியாளராவதற்கான சில டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய படிப்புகளைப் படித்தால் பல் மருத்துவரிடம் உதவியாளர் வேலை வாய்ப்பு பெறலாம். டென்டல் மெக்கானிக், டென்டர் ஆபரேடிங் ரூம் அசிஸ்டன்ட் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 12-ஆம் வகுப்பிற்கு பிறகு அத்தகைய டிப்ளமோ படிக்கலாம். 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்திருப்பவர்கள் டிப்ளமோ படிக்கத் தகுதி பெற்றவர்கள்.
மருத்துவ கல்வி இயக்ககத்தால் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் மாநில அளவிலான பொது கலந்தாய்வு மூலம் டிப்ளமோ படிப்பில் சேர தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களால் இந்த டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளைப் படித்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்புப் பெறலாம். வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெறலாம்.
பல் மருத்துவக் கல்வியில் நடத்தப்படும் பாரா டென்டல் கோர்ஸ் (டிப்ளமோ படிப்புகள்) :
1. Dental Hygienist
2. Dental Mechanics
3.Dental Operating Room Assistant
மேலும் விவரங்களுக்கு :
https://www.tnmgrmu.ac.in/index.php/courses/allied}health-sciences.html
- எம்.அருண்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.