செய்திகள்

குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய தசைப் பிடிப்பு குணமாக்க ஒரு எளிய வழி!

நார்ச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

கோவை பாலா

காய்  :  முருங்கைக் கீரை

சத்துக்கள் : நார்ச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு : முருங்கை  இலையை  (1 கைப்பிடி ) அளவு, சுக்கு (1 துண்டு), கடுகு (அரை ஸ்பூன்), மஞ்சள் (அரை ஸ்பூன்), அரிசி மாவு (100 கிராம்) இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து தசைப் பிடிப்பு உள்ள பகுதியில் பத்துப் போட்டு வந்தால் தசைப் பிடிப்பு உடனடியாக நீங்கும்.

உடலில் தசைப் பகுதிகளில் உண்டாகும் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடா இலையைப் பறித்து காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் தசைப் பிடிப்பினால் உண்டாகும் வலி குணமாகும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT