செய்திகள்

நீரிழிவு குறைபாடு மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு

கோவை பாலா

வெண் பூசணிக்காய் விதைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

வெண்பூசணி விதை - 50 கிராம்
புழுங்கலரிசி நொய் - 50 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
மோர் -   தேவையான அளவு

செய்முறை
 

  • முதலில் வெண் பூசணிக்காய் விதையின் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய் மற்றும் விதையைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • நொய்யரிசி நன்கு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து இறக்கிக் கொள்ளவும்.
  • பின்பு மோர் சேர்த்துக் குடிக்கவும்.

பயன்கள்
 
இந்தக் கஞ்சி நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய உன்னத உணவுக் கஞ்சி.

இந்தக் கஞ்சியை அதிக உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் உடல் சூட்டையும் தணிக்கும். மேலும் அதிக தாக உணர்வையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்த கஞ்சி இது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2)  உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT