முகப்பு
செய்திகள்

கடுமையான காய்ச்சலையும் குணப்படுத்த உதவும் கசாயம்

முதலில் புதினா இலையை எடுத்து சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். 

Updated On : 19 ஜனவரி, 2020 at 5:24 PM
பகிர்:


புதினா இலை கசாயம்

தேவையான பொருட்கள்

 
புதினா இலை.     -    50  கிராம்

மஞ்சள் தூள்.       -  சிறிதளவு


செய்முறை
 
முதலில் புதினா இலையை எடுத்து சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 300 மி.லி அளவு தண்ணீர்  ஊற்றி அதில் புதினா இலையைச் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து 50 மி.லி அளவாகச் சுண்டச் செய்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


பயன்கள்
 
கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள் இந்த கசாயத்தை 30 மி.லி முதல் 50 மி.லி வரை  நாள் ஒன்றுக்கு மூன்றுவேளை முதல் ஐந்து வேளை வரை குடித்து வந்தால் கடுமையான காய்ச்சலும் உடனே குணமாகும்.


இரவு படுக்கப் போகும் முன்
 
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.


குறிப்பு
 
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609   ,  73737 10080
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.