செய்திகள்

ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: யோகா -இயற்கை சிகிச்சை துறை தொடக்கம்

தினமணி

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரிக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கியது.

சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அரசு ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. அப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி மட்டும் அங்கு செயல்பட்டு வந்தது. பொதுவாக மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனையும் செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ஓமந்தூராா் வளாகத்தில் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசு கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை தற்காலிகமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இதையடுத்து மருத்துவமனையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக, மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் ரூ.2.70 கோடி மதிப்பில் நிறுவப்பட்ட 16 சிடி ஸ்கேன் கருவிகள், எக்ஸ்-ரே உபகரணங்கள் ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து யோகா - இயற்கை மருத்துவத் துறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பொது மருத்துவம், பொது அறுவைச்

சிகிச்சை, எலும்பு, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் என அனைத்து துறைகளும் செயல்பாட்டுக்கு வர உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT