skin diseases 
செய்திகள்

தோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து

தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரைக் கீரை கருஞ்சீரகச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

கோவை பாலா

தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரைக் கீரை கருஞ்சீரகச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

தேவையான பொருள்கள்

ஆரைக் கீரைச் சாறு    -  350 மி.லி

கருஞ்சீரகம்.                -   150 கிராம்

செய்முறை

முதலில் ஆரைக் கீரையை ஆய்ந்து எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். 

கருஞ்சீரகத்தைச் சுத்தப் படுத்திக் கொள்ளவும். அரைத்து எடுத்து வைத்துள்ள சாற்றுடன் கருஞ்சீரகத்தைச் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.

நன்கு ஊறின பிறகு அதனை உலர வைக்கவும். உலர்ந்த பின்பு அதனை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த  சூரணம் தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல்  சார்ந்த நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்தாகும். 

மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை  என இருவேளையும் தலா ஒரு கிராம் அளவுப் பொடியை எடுத்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

மேற்கூறிய சூரணம்  துணை உணவாகப் பயன்படக்கூடியது.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT