உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- சாமந்தி இலை மற்றும் தண்டு (ஒரு கைப்பிடி)எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் இடைவிடாத இருமல் சரியாகும். மார்பக சளியை கரைத்து வெளியே தள்ளும். காய்ச்சலை தணிக்கும். உடல் வலி சரியாகும். மூட்டு வலி குணமாகும்.
- ஒரு சாமந்தி பூவின் இதழ்களை எடுத்துக் கொள்ளவும், அதனுடன் சிறிது மிளகுப் பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். ஒற்றை தலைவலி குணமாகும். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. கல்லீரல் பலப்படும்.
- சாமந்தி இலைகளை பசையாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், பூக்களின் இதழ்களை மசித்து சேர்க்கவும். இவை இரண்டையும் தேங்காய் எண்ணெயயுடன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்துகொள்ளவும். இதை மேல் பூச்சாக பயன்படுத்தி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். தடிப்பு , சிகப்பு தன்மை , அரிப்பு ,சேற்று புண், அக்கி புண்கள் சரியாகும். வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. பூஞ்சை காளான்களை போக்கும். நுண் கிருமிகளை அழிக்கும்.
- சாமந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
- சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
- சாமந்திப் பூக்கள் (20) எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவந்தால் தீராத மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com